X

உலகத்துல எவ்வளவோ கோடுகள் இருந்தும் நான் ஏன் நாஸ்கா கோடுகளை (Nazca Lines) தேர்ந்தெடுத்தேன் ?

பூமியில் பல அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்துள்ளன. அறிவியல் வளர்ச்சியால் கூட கண்டறியப்படாத பல மர்மங்கள் இன்றும் உலகில் உள்ளன. அதில் ஒன்று தான் நாஸ்கா கோடுகள்.

நாஸ்கா கோடுகள் தெற்கு அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் பாலைவன பகுதியில் சுமார் 1500 வருடங்களுக்கு முன்பு வரையப்பட்டுள்ளது. இந்த கோடுகள் பல கிலோமீட்டர் தூரம் நீளமும் அகலமும் கொண்டது.

இந்த கோடுகளை நிலத்தில் இருந்து பார்த்தால் நீண்ட பாதை போலவும், வாய்க்காலை போலவும் தோற்றம் அளிக்கும், மேலும் இந்த கோடுகளை வானிலிருந்து அல்லது நிலத்திலிருந்து சற்று உயரே சென்று பார்த்தால் நம் கண்களுக்கு சில அறிய உருவங்கள் புலப்படும்.

அவற்றில் சில உருவங்கள் சிலந்தி, குரங்கு, மனிதன், மீன், திமிங்கலம், சிட்டுக்குருவி, மரம், பூ, ஓணான், கொக்கு மற்றும் ஏலியன் போன்று தோற்றமளித்துள்ளன.

இந்த நிலமானது அடர்ந்த கருப்பு நிற கற்களாலும், வெள்ளை நிற மணலாலும் சூழ்ந்து அமைந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது. இவை இரண்டையுமே ஆதாயமாக கொண்டு அவ்வுருவங்களையும் கோடுகளையும் ஏற்படுத்தி உள்ளனர்.

இந்த அறிய உருவங்களானது முதன் முதலில் 1920 – ல் சுற்றுலா பயணிகள் விமானத்தில் அவ்வழியே பயணிக்கும் போது கண்டறியப்பட்டுள்ளது.

இக்கோடுகள் யாரால் வரையப்பட்டது, எப்படி வரையப்பட்டது மற்றும் எதற்காக வரையப்பட்டது என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது. இதற்கு கருத்து தெரிவிக்கும் வகையில் பல்வேறு அறிவியலாளர்கள் பல்வேறு வகையிலான தகவல்களை அளித்துள்ளனர். அவற்றில் சில கருத்துக்கள் இதோ உங்கள் பார்வைக்கு.

  1. அறிவியளாலர் ஜானி இஸ்லா கருத்துப்படி இந்த கோடுகள் கி.மு.500-ல் பரகாஸ்(Paracas) சமூகத்தினரால் உருவாக்கப்பட்டு கி.மு.50-ல் நாஸ்க்கா சமூகத்தினரால் மேம்படுத்தப்பட்டது என அறியப்படுகிறது.
  2. டொர்பியோ மெஜ்ஜியா என்பவர்தான் இந்த கோடுகளைப் பற்றி 1927-ல் முதலில் ஆராய்ந்தார். அவர் இந்த கோடுகளை இன்கா சமூகத்தினரால் பயன்படுத்தப்பட்ட விமான ஓடுதளம் என்றார்.
  3. அறிவியளாலர் மைக்கல் கேயே கூற்றுப்படி அன்றைய சமூகத்தினரால் இவைகள் தங்கள் மூதாதையருடன் தொடர்பு படுத்தும் பாதைகள் எனவும், தங்கள் விளை நிலத்திற்கு நீர் கொடுக்கும் பாதைகள் எனவும் நம்பப்பட்டதாம்.
  4. மரிய ரிச்சே எனும் கணிதவியலாளர் இந்த கோடுகள் வானவியல் நாட்காட்டி என்கிறார். இந்த பட்டைகள் முக்கிய நட்ச்சத்திரங்கள் மற்றும் கோள்களின் இடத்தை குறிக்கின்றது என்றார்.
  5. எரிக் வாங் இந்த பாதைகளை 1968-ல் ஆராய்ந்தார். அவர் இந்த பாதைகள் புராதன வானவியலார்களால் உருவாக்கப்பட்ட ராக்கெட் ஓடுதளங்கள் எனவும், இந்த இடத்தின் நிலைத்தன்மை பாதிப்பால் அப்படியே விட்டுவிட்டு சென்று விட்டனர் எனவும், மக்கள் அவர்களை கடவுள்கள் என நினைத்து வழிபட்டதாகவும் , அவர்கள் திரும்ப வருவார்கள் என
    நம்பிக்கையுடன் இருந்ததாகவும் கூறினார்.

இதில் வியப்புக்குரிய சிறப்பு என்னவென்றால், இந்த கோடுகளானது இவ்வளவு ஆண்டு (சுமார் 1500 ஆண்டுகள்) காலமாகியும் அழியாமல் இருப்பது மர்மமாகவே உள்ளது, ஒருவேளை இப்பகுதி வறண்ட பாலைவனமென்பதால் குளிராலும், வெயிலாலும் அடர்த்தியாகி அழியாமல் இருக்கலாம் !

Categories: Knowledge Hub
Related Post
Leave a Comment